சீருடையில் ‘ஜிலீர் வாழ்க்கை ”பெண் காக்கி ஆயுதப்படை பிரிவுக்கு பந்தாட்டம்

சீருடையில் தகாத உறவில் ஈடுபட்ட கோவை பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் சீருடையில் ஓர் ஆணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் காவலர் பணியில் இருந்தபோது சோமனூர் புறக்காவல் நிலையத்தில் தகாத உறவில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,காவல்துறையினர், இது பணியின்போது நடக்கவில்லை என்றும் இது தனியார் இடம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

முதலில் அந்த ஆணும் காவல்துறையைச் சேர்ந்தவர்தான் என்று தகவல் வெளியாகியது. ஆனால், அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், சீருடையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து, அந்த காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் காவலருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி,விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply