மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள 240 கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தினர் செய்தியாளர் சந்தித்தனர்.
அப்போது பேசிய அச்சங்கத்தினர், மே 1 முதல் 5 ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும், இதனால் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும், சலுகையும் வழங்குவதில்லை எனவும், கழிவு பஞ்சு விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக கழிவு பஞ்சு நூற்பாலைகள் சரிவை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கழிவு பஞ்சிற்கான ஒரு சதவீத மார்க்கெட் வரியை குறைக்க வேண்டும் எனவும்,
கழிவு பஞ்சு பேக்கிங் வரியை கைவிட வேண்டும்.
கழிவு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களது
கோரிக்கை நிறைவேறவில்லை எனில், உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் கூறிய அவர்கள், இந்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 14 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.