ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை, 2008 அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது.

 

முதன்முறையாக நிலவிற்கு விண்கலம் ஏவிய இந்தியா, அங்குள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. அந்த விண்கலத்தின் ஆயுள், 2009 ஆகஸ்ட் மாதம் முடிந்தது. இதையடுத்து மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப, இஸ்ரோ முடிவெடுத்தது. இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. இது விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி – 16 ஆம் தேதிக்கு இடையே விண்ணில் செலுத்தப்படும். ரூ.800 கோடி மதிப்புள்ள விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எம்.கே – III ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். இது, வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரையிரங்கும் என்று தெரிவித்துள்ளது.


Leave a Reply