சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! தொழில் நுட்ப பிரச்சனைதான் உண்மை காரணமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

 

சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களில் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கம் தொடங்கியதால் 8 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டி, கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மெட்ரோ ரயில் ஊழியர் ஒருவரை, இணை பொது மேலாளர் சதீஷ் பிரபு தாக்கியதாக கூறி, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலிறுத்தினர். இந்த விவகாரத்தில் இன்று பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இச்சூழலில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

எனினும், வண்ணாரப்பேட்டை-விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

 

மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் சிலர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று ரயில்கள் இயக்கப்படாததற்கு, உண்மையில் தொழில் நுட்ப பிரச்சனை தான் காரணமா என்று பயணிகள் பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply