ஆட்சியில் திமுக இருந்தால் நல்ல திட்டங்கள் வரும்! சூலூர் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பேச்சு

ஆட்சியில் திமுக இருந்தால் நல்ல பல திட்டங்கள் வரும் என்று பேசி, சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

 

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று சின்னியம்பாளையம் பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில. ஈடுபட்டார்.

 

சின்னியம்பாளையம் பிஎன்பி காலனியில் துவங்கி, அரிஜன காலனி, ஜெமினி சந்து, வெங்கிட்டாபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

 

பொங்கலூர் பழனிச்சாமி பேசியதாவது: மே மாதம் 19ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருகின்றதோ அப்போதெல்லாம் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது.

 

இந்த திருச்சி சாலையை விரிவாக்கம் செய்த பெருமை திமுகவையே சேரும், செம்மொழி மாநாடு மூலம் கோவைக்கு 1000 கோடி ரூபாயில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தது். ஆனால், எதுவும் செய்ய வில்லை.

சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி

 

இந்த தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினையாக விசைத்தறி உள்ளது. ஜிஸ்டி வரியை முழுமையாக நீக்கி விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும். நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

 

திமுக புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொ ண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply