சென்னை அமைந்தகரையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசவேலையை அரங்கேற்றுவதற்காக வந்தாரா என விசாரணை நடக்கிறது.
சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான பணி நடக்கும் இடத்தில் தகராறு ஏற்பட்டது. இது குறித்து, காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்து, கந்தர்ப்பதாஸ் என்ற நபரை கைது செய்தனர். அவரை தொடர்ந்து விசாரித்ததில், உல்பா இயக்க தீவிரவாதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்ட கந்தர்ப்பதாஸ், சென்னையில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில், கடந்த ஆறு மாதங்களாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அடுத்த வாரம் திறந்து வைக்க உள்ளார்.
இந்த சூழலில் கைது செய்யப்பட்டுள்ளதால், ஏதேனும் சதிதிட்டம் தீட்டும் நோக்கில் தங்கியிருந்தாரா? வேறு யாரேனும் இதுபோல் வந்துள்ளனரா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.