டெபாசிட் 10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய சூலூர் வேட்பாளர் பிரபாகரன்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலில் போட்டியிடும் வகையில் கோவை நகர்புற நிலவரி உதவி ஆணையரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலகிருஷ்ணனிடம் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக வழங்க வேண்டிய டெபாசிட் தொகையான 10 ஆயிரம் ரூபாய் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கினார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே,தேர்தல் செலவிற்காக பொதுமக்களிடம் ” டொனேஷன் ” கேட்டதும் இதே வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply