தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது ஃபனி புயல்! வரும் 30இல் எங்கு கரை கடக்கிறது தெரியுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 30ஆம் தேதி கடலூர் -வேதாரண்யம் இடையே கரை கடக்கும் என்று தெரிகிறது.

 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் மற்றும் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; இதற்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தமிழகம் நோக்கி வருகிறது.

 

இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 28, 29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி, ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ஃபனி புயலானது, வரும் 30ஆம் தேதி கடலூர் -வேதாரண்யம் இடையே கரை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமாக காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கட்டுக்கடங்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Leave a Reply