பொத்துக்கிட்டு ஊத்தப்போகுது வானம்! தமிழகம் நோக்கி நகரும் ஃபனி புயல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும்.

 

தமிழகத்தில் பிப்ரவரி முதலே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச்சில் இது மேலும் அதிகரித்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே, வெயில் வாட்டியெடுக்க, மழை பெய்யாதா என்று பலரும் ஏங்கி வந்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முதல், பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து, வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகிறது.

 

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வரும் 28, 29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும்.

 

அதேபோல் அடுத்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


Leave a Reply