கோவையில் திருடன் என்று நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.
கோவை எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே பாலசுந்தரம் என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. இங்குள்ள மரக்கிளையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சொரன் மார்கஸ் என்பவரின் சடலம், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் தூக்கிட்டவாறு சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில் மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இறந்த சொரன் மார்கஸ் கோவையில் இருந்து கேரளா செல்வதற்காக க.க சாவடி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அவரை கவனித்த அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவன் வட மாநிலத்தவரான சொரன் மார்கஸ் திருடன் என நினைத்து, அவசர போலீஸ் 100-க்கு தகவல் தந்துள்ளார்.
போலீஸ் வந்து பார்த்து போது வடமாநிலத்தை சேர்ந்தவன் இல்லாததால் விசாரணை செய்து விட்டு திரும்ப வந்துள்ளனர்.பி ன்னர்,இச்சம்பவம் குறித்து பிரபாகரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், பிரபாகரன் வட மாநில இளைஞர் சொரன் மார்க்கஸை, திருடன் என நினைத்து குடி போதையில் வாய்த்தகராறு செய்து கல்லால் தலையில் தாக்கியதில் இறந்தது தெரிய வந்தது. கொலை வழக்கில் சிக்கக் கூடாது என்பதற்காக, தூக்கு போட்டது மரக்கிளையில் கட்டிதொங்கவிட்டதை ஒப்புக் கொண்டார்.
இக்கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.