கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தாள். மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணை முடிவில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவன் சிறுமியை வன்கொடுமைகை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு, ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,அ னுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.