நீதிமன்றம் அருகே பலத்த குண்டுவெடிப்பு! பீதியில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நீதிமன்றம் அருகே நடந்த சம்பவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.

 

அண்டை நாடான இலங்கையில், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து, கடந்த 21ஆம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில், 360 பேர் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பலரை கைது செய்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ. தீவிரவாத இயக்கம் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

எனினும் கண்காணிப்பை மீறி, இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புகோடா என்ற இடத்தில், சிறிய அளவிலான குண்டு வெடித்துள்ளது.

 

நீதிமன்ற கட்டிடத்திற்கு பின்பகுதியில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து பீதியில் அலறியடித்து அழுதபடி ஓடினர். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று, முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஆங்காங்கே குண்டுகள் வெடிப்பது, இலங்கை மக்களை நிம்மதியிழக்க செய்துள்ளது.


Leave a Reply