50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்! வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்; இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனினும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து ஆறுதல் அளித்து வருகிறது.

 

குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், திருப்பூர், மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக, அது தெரிவித்துள்ளது.

 

நாளை மறுநாள் முதல் 24 ஆம் தேதி வரை, தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply