உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! பணம் பிடுங்கும் நோக்கில் சதி என நீதிபதி ஆவேசம்!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது, தன்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி என்று அவர் பதிலடி தந்துள்ளார்.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சன் கோகாய். அவர் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணி புரியும் பெண் ஒருவர், பாலியல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தம்மை, கோகாய் தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

 

இது, நீதித்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது பணம் பிடுங்கும் நோக்கில் நடக்கும் சதி என்று, நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என் மீது பாலியல் புகார் கூறிய பெண், குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்; அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளன. இதன் காரணமாக போலீசார் அவரை இரு முறை எச்சரித்துள்ளார் . உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர்; பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்.

 

சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன் . பாலியல் புகார் கூறி என்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி நடக்காது. எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன்.

 

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன். நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இதனை வெளியிட தடையும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


One thought on “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! பணம் பிடுங்கும் நோக்கில் சதி என நீதிபதி ஆவேசம்!!

Leave a Reply