கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயிலில் வாடிய பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது.

 

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும்; மாநகரப் பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால், பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளிமண்டல வனப்பகுதியில் இன்று பிற்பகல் கனமழை பெய்தது. குறிப்பாக, மசினக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரம் நீடித்த பலத்த மழையால் இதமான சூழல் நிலவியது.

 

அதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழநி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்துவருகிறது.

 

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரமாக இடி,மின்னலுடன் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையி்ல் இந்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply