மின் மயானம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு! பல்லடம் அருகே தேர்தலை புறக்கணித்த மக்கள்

Publish by: --- Photo :


பல்லடம் அருகே, மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மின் மயானம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தியும், அரசுக்கு உணர்த்தவும், மக்களவை தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதேபோல், தேனி மாவட்டம் போடி அருகே மலைக்கிராமத்தில் தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குரங்கணி அருகே தென்றல் என்ற மலைக்கிராமத்தில் 400 வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.


Leave a Reply