சென்னை எம்.எல்.ஏ. ஆஸ்டலில் திடீர் ரெய்டு! பறக்கும் படையினரின் அதிரடியால் பரபரப்பு

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது.

 

தமிழத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில்,  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சி.பிளாக் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பறக்கும் படையைச்சேர்ந்த 5 அதிகாரிகள் சி பிளாக்கில் உள்ள 10-வது மாடியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைப்பெற்று வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் இச்சோதனையை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஊடகங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.


Leave a Reply