இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 2இளைஞர்கள் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா (வயது 27). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார்.

இவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டில் தங்கி கரகாட்டத்திற்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் துர்கா வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை ராஜ்குமாரின் மகன் சிவா செல்போனில் வீடியோ எடுத்து அவரது நண்பர் குமார் என்பவருக்கு அனுப்பினார்.

குமார் அந்த வீடியோவை துர்காவின் கணவருக்கு அனுப்பினார். அந்த வீடியோவை பார்த்த வரதராஜ், குமாரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது இந்த வீடியோவை உனது உறவினர் மகன் சிவா தான் எனக்கு அனுப்பினார் என்று கூறினார்.

அதன்பேரில் வரதராஜ் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு துர்கா குளிப்பதை வீடியோ எடுத்த சிவா மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Leave a Reply