லின் டான், தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றனர்

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் – சென் லாங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டை லின் டான் 9-21 என எளிதில் இழந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன்பக்கம் இழுத்தார். 2-வது செட்டை 21-7 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் லின் டான் தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானின் தாய் சூ யிங் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் சூ யிங் 21-16, 21-19 என வெற்றி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 


Leave a Reply