எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் ஏற்கபட்டுள்ளது- வேல்முருகன்

கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன், எங்களால் முடிந்த சிறிய உதவி செய்யப்படும். மாலை தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

ஸ்டாலின் பதில் என்ற அடிப்படையில் பா.ம.க. ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.

ராமதாஸ் பொய்யான, உண்மைக்கு மாறான கூட்டணியை மாறி மாறி வைத்து வருகிறார். இதுவரை தேர்தல் ஆணையம் எனக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கவில்லை. 40 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்வதை மோடி, எடப்பாடி அரசு தடுக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது. தேர்தலுக்கு பிறகு நீதிமன்றத்தை நாட உள்ளேன்.

கலைஞர் ஆட்சியில் தான் வன்னியருக்கான இட ஒதுக்கீடு கிடைத்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட் தொகுதிகளில் மட்டுமே எனது ஆதரவு. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 7 ஆண்டுகளாக நான் மக்களை திரட்டி நடத்திய போராட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஓரளவு குறிப்பிடப்பட்டு உள்ளதால் நான் ஆதரவு அளித்துள்ளேன். 7 பேர் விடுதலை தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருகிறேன்.


Leave a Reply