ரோஜர் பெடரர், மேட்வெதேவ், கோபின், தியாபோ, சிட்சிபாஸ் 3-வது சுற்றில் வெற்றி!!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் பிலிப் கிராஜினோவிக்கை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் டேனில் மெட்வெதேவ் ரெய்லி ஒபெல்காவை எதிர்கொண்டார். இதில் மெட்வெதேவ் கடும் போராட்டத்திற்குப்பின் 7(7) – 6(5), 6(5) – 7(7), 7(7) – 6(0) என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
ஷபோவாலோவ் 6-3, 7(7) – 6(5) எனவும், டிசிட்சிபாஸ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கிலும், டேவிட் கோபின் 6-4, 6-4 என நேர்செட் கணக்கிலும் வெற்றி பெற்றனர்


Leave a Reply