திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
- அப்போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாட்சி நோக்கி வந்த வேனில்
உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 700 இருந்தது.
வேனை ஓட்டி வந்த உதயா என்பவரிடம் விசாரித்தபோது திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த பணம் என கூறினார்.
கைப்பற்றப்பட்ட பணம் உடுமலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை தாசில்தார் தங்கவேல் விசாரணை செய்து வருகிறார்
மேலும் செய்திகள் :
16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
கோவையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த சாரைப்பாம்பு..!
மகனை அடித்து கொன்ற மனைவி..!
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. உடற்கல்வி ஆசிரியர் அத்துமீறல்..!
பிளான் பண்ணி திருடிய நபர் தர்மடி கொடுத்த மக்கள்..!
10 ஆடுகள் கடித்து கொலை.. வனத்துறை கூறிய பதிலால் மக்கள் ஆத்திரம்..!