2 கார்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பரிதாபமாக பலி..!
மகாராஷ்டிரா மாநிலம் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் மும்பையின் ஆக்கூர் விரைவு சாலையில் கார் ஒன்று எதிர் திசையில் தவறான பாதையில் சென்றுள்ளது.
அப்பொழுது மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





