சென்னை திரும்ப 1,941 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1941 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 36 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதைப்போல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 1,399 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சென்னைக்கு 1,941 பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 261 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப மக்கள் வசதிக்காக இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 மாநகர பேருந்துகளும், நாளை அதிகாலை 125 மாநகர பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





