முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள சிற்பம்..!
மாமல்லபுரம் கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீளமான சிற்பத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்துள்ளார்.
எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்தும், அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை முன்வைத்தும் மீண்டும் 2021 அதிமுக என்ற தலைப்பில் மாமல்லபுரம் கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்ப கல்லூரியில் பட்டம் பெற்ற 10 கலைஞர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். முதல்வர் நின்றகோலத்தில் இரட்டை இலை சின்னத்தை காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்துள்ளார்.
மணல் சிற்பத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது உருவமும் இடம் பெற்றுள்ளது.







