ஒரு கண், இரு நாக்குடன் மூக்கில்லாமல் பிறந்த நாய்குட்டி பிறந்த சிலமணி நேரங்களிலேயே உயிரிழப்பு..!
பிலிப்பைன்சில் ஒருகண் 2 நாக்குடன் பிறந்த வித்தியாசமான நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்தது. ஆக்லாந்து மாகாணத்தை சேர்ந்த அமீதி என்பவர் வளர்த்து வந்த நாய் கடந்த 6ஆம் தேதி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு நாய்குட்டி மூக்கு இல்லாமல் 2 நாக்கு மற்றும் இரு கண்ணுடன் பிறந்ததால் சுவாசிக்க திணறியுள்ளது. சைக்லோப்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டி அன்றைய தினமே உயிரிழந்ததாக அமீதி சோகத்துடன் பகிர்ந்துள்ளார். மரபணு குறைபாடே வித்தியாசமான தோற்றத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.







