16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கூட்டி சென்ற இளைஞர் கைது..!
கோவை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி செல்லப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் சிறுமியை கடத்திச்சென்று இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போத்தனூரில் இரும்பு பட்டறையில் வேலை செய்துவரும் மணிகண்டன் என்ற இளைஞருக்கு கிரிக்கெட் விளையாட சென்று வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது நண்பர் வீட்டுக்கு மணிகண்டனை அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியையும் பத்திரமாக மீட்டனர்.






