--- --:--:-- --

திடீரென மின்னல் தாக்கியதில் 15 பேருக்கு நேர்ந்த கதி..!

9

துரையில் மயானத்தில் நடந்த இறுதி சடங்கின் பொழுது மின்னல் தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில் மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

 

அதில் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் திடீரென மழை பெய்ததால் அனைவரும் அங்கிருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்பொழுது மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon