144 உத்தரவு பிறப்பித்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி..!
இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க 144 உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பொது முடக்கம் என்பது எப்படி இருக்கவேண்டும் போன்ற விஷயங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்த நிலையில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிக முக்கியமான விஷயமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நாடுமுழுவதும் பெரும் பிரச்சினையாக மாறி இருக்க கூடிய நிலையில் இது குறித்து மாநில அரசுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் ஒவ்வொரு மாநில அரசுகளும் எவ்வளவு ஆக்சிஜன் சப்ளை உள்ளது, எவ்வளவு படுக்கைகள் உள்ளது, அதில் எத்தனை நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறித்த விஷயங்களெல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்-லைனில் வெளியிட வேண்டும் என்ற முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த செய்தி தினமும் ஊடகங்களுக்கும் வழங்கவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.






