1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
முகூர்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு, 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 370, நாளை மறுநாள் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
கோயம்பேட்டில் இருந்து நாளையும், நாளை மறுநாளும் தலா 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், மாதவரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 290 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.





