கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும்..!
பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
ஆந்திராவில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கிற்கு உதவியாகவும் தலா 15 ஆயிரம் வழங்குவது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கொரொனா பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






