மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து கட்சி ஆலோசனை..!
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக 13 கட்சி தலைவர்களை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. ஆளும் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், பாமக, பாரதிய ஜனதா, அதிமுக ஆகிய கட்சிகள் இந்த குழுவில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்எல்ஏ இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவசர அவசியம் கருதி கொரொனாவை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற இந்த குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.




