--- --:--:-- --

கையில் சமுதாய கயிறு கட்டுவது தொடர்பாக தகராறு..!

8

ம்பை அருகே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

 

இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் கையில் சமுதாய ரீதியாக கயிறு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon