கோழியால் கொரொனா பரவும் என நிரூபித்தால் 1 கோடி பரிசு!
கோழி மற்றும் முட்டை சாப்பிட்டால் கொரொனா பாதிப்பு ஏற்படும் என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டை, கோழி பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முட்டை, கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் கொரொனா தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால் கோழி மற்றும் முட்டை விற்பனையார் 500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் இவ்வாறு வதந்தி பரப்புவதை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வலியுறுத்திய அவர் மீது முட்டை சாப்பிட்டதால் கொரொனா பாதிப்பு ஏற்பட்டது என யாரேனும் நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார்.






