--- --:--:-- --

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேர்தல் கமி‌ஷனிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகாா் மனு

21283

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது
நடைபெறுகிற பாராளுமன்ற தோ்தலுக்காக அனைத்து கட்சியினரும் விதிகக்குட்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதை மீறும் வகையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய சமூகம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

எனவே அவரது அமைச்சர் பதவியை பறிக்க தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ராமநாதபுரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மதவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

எனவே அவரது வேட்பு மனுவை நிராகரித்து தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon