--- --:--:-- --

ஸ்விக்கி ஊழியர்கள் ஊதிய குறைப்புக்கு எதிராக நடத்திய போராட்டம்..!

11

பொது முடக்க காலத்திலும் வீட்டிற்கே வந்து உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊதிய குறைப்பை கண்டித்து அவர்கள் போராட்டமும் நடத்தினர்.

 

சென்னையில் மட்டும் எட்டாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ஸ்விக்கியில் பணியாற்றுகிறார்கள். சென்னையை தவிர முக்கிய நகரங்களிலும் அவர்கள் வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்யும் நிலையில் பொது முடக்க நேரத்தில் தங்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள் ஊழியர்கள்.

 

பெட்ரோல் விலை உயர்வு, பொது முடக்கத்தால் அதிகரித்துள்ள ஆர்டர்கள் என பல நெருக்கடிகள் உள்ள நேரத்தில் இந்த ஊதியக் குறைப்பு ஊழியர்களை திகைக்க வைத்துள்ளது.

 

ஊதியக் குறைப்பு, சலுகைகள் குறைப்பு கண்டித்து சென்னையில் இருநூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்களுக்கு தீர்வு வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் ஸ்விக்கி ஊழியர்கள்.

Leave a Reply

Right Menu Icon