சூர்யா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்ட மீரா மிதுன் உருவ பொம்மை எரிப்பு..!
நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வரும் சர்ச்சைக்குரிய நடிகை மீராவின் உருவபொம்மை புதுச்சேரியில் எரிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி சிலை அருகே முழக்கம் எழுப்பிய கலாம் சேவை மையத்தினர் மீரா மிதுனின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். முன்னதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கலாம் சேவை மைய நிர்வாகிகள் கிழக்கு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகை மீரா மிதுன் இது வடிவேலு காமெடி என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.







