சிவப்பு குடும்ப அட்டை இல்லாதோருக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக ஜிப்மர் தகவல்..!
காப்பீடு திட்டத்தில் சிவப்பு ரேஷன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு ஏப்ரல் 1 முதல் சிகிச்சை மற்றும் உயர் பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





