--- --:--:-- --

யூசுஃப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி அவசரமாக இறக்கம்..! காரணம் என்ன..?

8

பிரபல தொழிலதிபரும் கேரளாவைச் இருந்தவருமான லூலு குழுமத்தின் தலைவர் எம்ஏ யூசுஃப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி இறக்கப்பட்டது. கொச்சியில் ஏர்ஷோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக தனக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் யூசுப் அலி அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.

 

வந்த போது எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை கொச்சியில் மழை பெய்த நிலையில் பெரும் சப்தத்துடன் ஹெலிகாப்டர் தரையில் மோதியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

யூசுப் அலி உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon