--- --:--:-- --

மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

12

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை அருகிலிருந்த குப்பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

 

குப்பையில் இருந்த மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon