--- --:--:-- --

‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும்

11

டிக் டாக் போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கு மனநல கல்வி மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவில் பேசிய அவர், நாட்டில் மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.

சம்பாதிக்கும் போராட்டத்தால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சமூக வலைதளம் பல குடும்பங்களை சீரழித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் டிக் டாக் செயலிகளை முதலில் ஒழிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon