--- --:--:-- --

9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

download

மயிலாடுதுறை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தரங்கம்பாடியை சேர்ந்த 19 வயதான ரஞ்சித் இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

 

அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். 7 மாத கர்ப்பிணி என்ற விஷயம் தெரிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம். வீட்டிலிருக்கும் சிறுவர்-சிறுமியர்களை பெற்றோர்கள் கண்காணிக்க தவறுவதே இதுபோன்ற குற்றங்கள் நடைபெற காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon