--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் பழகிய பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கைது..!

2

காரைக்கால் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறில் அந்த சிறுமியிடம் நந்தகுமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் நட்பால் செய்துள்ளார்.

 

கடந்த 18ஆம் தேதி இரவு தனது நண்பர் ராம் குமார் என்பவர் மூலம் சிறுமியை தனியே வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.

 

இருப்பினும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து நந்தகுமாரையும், ராம்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon