--- --:--:-- --

2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடிமழை..!

3

ந்தமான் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு காரணம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon