சாகசம் செய்ய நினைத்து சடக்கென்று விழுந்த இளைஞர்கள் ..!
காரைக்குடி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தவறிவிழும் காட்சிகள் வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து பைக் சாகசம் செய்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் இருந்து கோட்டையூர் வரை இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டே சென்றுள்ளார். அப்போது கோட்டையூர் பேருந்து நிறுத்தத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர்.
இருசக்கர வாகன சாகசத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





