14 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர் இருந்தவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு அறிகுறி தென்பட்டதால் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியதில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 45 பேருக்கு அறிகுறிகள் உள்ளதாக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் உறுதியானது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






