--- --:--:-- --

அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கு என பதாகை ஏந்திய இளைஞர்கள்..!

4

கொரொனா பெருந்தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் அரியர்களை பாஸ் என்று அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எங்கள் சாய்ஸ் நீங்கதான் என்ற பதாகையை ஏந்தி மாணவர்கள் நிற்பதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி வாய்விட்டு சிரித்து உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

நாகை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துள்ளார்.

 

நகரின் முக்கிய வீதிகளில் கடும் வெயிலில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்துள்ளார்.

 

அங்கு 15க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்று உள்ளனர். பதவிகளில் எடப்பாடியார் என்று மேல் வரிசையில் நின்ற மாணவர்கள் எழுதிவைத்து இருந்துள்ளனர்.

 

அடுத்த வரிசையில் நின்று இளைஞர்கள் அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கு என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்து இருந்துள்ளனர். இதை பார்த்து மனம் நெகிழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி வாய்விட்டு சிரித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon