நண்பர்களிடம் நீச்சல் சவால் விட்டு உயிரை விட்ட இளைஞர்..!
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் அருகே கிராமத்தில் குட்டையில் மூழ்கி மாயமான வெங்கடேசன் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். மறுகரைக்கு நீச்சலடித்து சென்று வருவதாக நண்பர்களிடம் சவால் விட்டு சென்ற நிலையில் மூழ்கி மாயமானார்.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரம் தேடி இன்று சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





