--- --:--:-- --

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

10

கொரொனா வைரஸ் உறுதியான விரக்தியில் மருத்துவமனை மாடியில் இருந்த இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய்.

 

குடும்ப தகராறு காரணமாக இவர் பூச்சி மருந்து குடித்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது மருத்துவமனையில் அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இதில் அவருக்கு தொற்று உறுதியாகவே விரக்தியடைந்த அவர் மருத்துவமனையில் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon