28 ஆண்டுகளில் 53 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி!
ஹரியானாவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 28 வருடங்களில் 53 ஆவது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானவர் சண்டிகரை சேர்ந்த அசோக். கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு டிஎல்எஃப் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.
இவர் அவ்வப்போது பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகிறார். ஹரியானாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாரதிய ஜனதா அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதில் அஷோக் 53 ஆவது முறையாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தனது 28 ஆண்டு கால சேவைக்கு கிடைத்த பாராட்டு என்று தெரிவித்துள்ளார்.





